Advertisment

'மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி தேவை'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

3000 crores needed to buy medical equipment - CM

Advertisment

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று மற்றமாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர்மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.அதன்படி, கரோனா தடுப்பு மருதத்துவஉபகரணங்களை வாங்குவதற்கு 3,000 கோடி தேவைப்படுகிறது. கரோனாவை தடுக்கவும்,பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் 9,000 கோடி சிறப்பு நிதி தேவைப்படுகிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனே விடுவிக்க வேண்டும். 2020-2021 ஆம் ஆண்டு நிதிக்குழு மானியத்தில் 50 சதவீதத்தை ஊரக உள்ளாட்சிகளுக்கு விடுவிக்கவேண்டும். மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்குகூடுதல் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

corona virus edappadi pazhaniswamy modi
இதையும் படியுங்கள்
Subscribe