புதுச்சேரியில் இறால் பண்ணை தொழிலதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள ரொசாரியோ வீதியில் சரவணபாபு என்பவர் வசித்து வருகிறார். புதுச்சேரியை அடுத்த கூணிமேடு பகுதியில் இறால் பண்ணை அமைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இன்று காலை வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ மற்றும் லாக்கர் திறக்கப்பட்டு, அதிலிருந்த 300 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரொக்க பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி சாமான்களை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

300 sovereign gold jewelry robbery

Advertisment

இதனை அடுத்து முத்தியால்பேட்டை போலீசாருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் அளித்த நிலையில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்தனர். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் கொண்ட கருவியையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து போலீசார் அருகிலுள்ள வீடுகள் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதிகமான குடியிருப்பு பகுதிகள் இருக்க கூடிய இப்பகுதியில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.