Advertisment

ஆணுக்கு 300 ; பெண்ணுக்கு 200 ! நூற்றாண்டு விழாவில் விளையாடும் கோடிகள்!

300 for males; 200 for a girl! Crows playing at the centenary!

Advertisment

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா 30-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. அரசு விழாவாக இதனை நடத்தும் எடப்பாடி அரசு, விழாவை பிரமாண்டப்படுத்த பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

குறிப்பாக, மக்களைத் திரட்டுவதற்காக எடப்பாடி போட்டுள்ள பட்ஜெட்டும் பிரமாண்டமாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.

அவர்களிடம் நாம் பேசியபோது, " ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 150 பேருந்துகள், 100 வேன்கள் வரவேண்டும் என அமைச்சர்களிடமும் மா.செ.க்களிடமும் வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி. அதன்படி தமிழகம் முழுவதிலுமிருந்து 4,800 பேருந்துகளும் 3,200 வேன்களும் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.

Advertisment

இவைகள் மூலம் சுமார் மூன்று லட்சம் பேரை விழாவுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விழாவிற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு 300 ரூபாயும், பெண்களுக்கு 200 ரூபாயும் கொடுக்க தீர்மானித்துள்ளனர்.

மேலும், சாப்பாடு , பிரியாணி மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கித்தரப்பட வேண்டும். இவைகளுக்காக மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட் . இந்த பணம் , ஆட்களை திரட்டி வரும் அமைச்சர்கள் அல்லாத மா.செ.க்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நேற்றைய வரையில் ஆட்களைத் திரட்டுவதற்கான தொகை முழுமையாக செலவிடப்படவில்லை. தொகையை பதுக்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இது தவிர வாகன வாடகை, பேனர்கள், இருக்கைகள், அலங்காரங்கள், மேடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையிலான செலவினங்களுக்காக 15 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆக, 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நூற்றாண்டு விழாவை நடத்துகிறார் எடப்பாடி ! இன்னும் பல நிகழ்வுகளுக்காகவும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழா முடிவில் தான் முழுமையான செலவு விபரங்கள் தெரிய வரும் " என்கிறார்கள்.

300 centenary Crows girl male play
இதையும் படியுங்கள்
Subscribe