300 crore looted by robbers who  jot jail

சென்னை, கொளத்தூர் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி கொண்ட வீடு உள்ளது. இவர் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சொந்தமாக காய்கறி சந்தை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி மாலை கிருஷ்ணன், தனது மகனுடன் கடை வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். மேலும் அவரது மனைவி அமுதாவும், மூத்த மகளும் கரோனா பாதிப்பு காரணமாக வீட்டின் இரண்டாம் தளத்தில் தனிமைப்படுத்திக்கொண்டு இருந்துள்ளனர்.

Advertisment

300 crore looted by robbers who  jot jail

அப்போது வீட்டுக்குள் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேச் சென்று முதல் தளத்திலிருந்த கிருஷ்ணனின் இளைய மகளை கத்தியைக் காட்டி மிரட்டி கயிற்றால் கட்டிபோட்டு வாயில் பிளாஸ்த்ரி ஒட்டி, பீரோ சாவியை எடுத்து அதிலிருந்த பணத்தை சாக்குப்பையில் கட்டி எடுத்துக்கொண்டு காரில் தப்ப முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரின் கதவு திறக்காமல் போனதாலும், அங்கு வந்த கிருஷணனின் மகன் அவர்களை கண்டு துரத்தியதாலும் அந்த கும்பல் கொள்ளையடித்த பணத்தை மூட்டையாக அங்கேயே போட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றது.

Advertisment

300 crore looted by robbers who  jot jail

இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் கைப்பற்றி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

300 crore looted by robbers who  jot jail

இந்த சம்பவத்தில் ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வர, சிசிடிவியில் பதிவான சொகுசு காரின் எண் போலியானது என்பதால் கும்பலின் அடையாளம் கிடைக்காமல், கொள்ளையர்களை பிடிக்க அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

300 crore looted by robbers who  jot jail

அந்த சமயத்தில் அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் ஒரு வழக்கை விசாரித்து வந்தனர். அண்ணா நகரைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பிரவீன் கடந்த 7ம் தேதி காரில் செல்லும் பின்னால் மற்றொரு காரில் துரத்தி வந்த கும்பல் அவரது காரின் பின்னால் மோதி விபத்து நாடகம் நடத்தி பிரவீனை கடத்தி பணம் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், பிரவீன் காரில் இருந்து இறங்கிய கும்பலை பார்த்ததும் சந்தேகமடைந்து காரின் கதவுகளை திறக்காமல் உள்ளேயே அமர்ந்ததால் கடத்தல் திட்டம் நிறைவேறவில்லை. இந்த சம்பவத்தில் இரண்டு வழக்கின் சிசிடிவியையும் ஒரே சமயத்தில் ஆய்வு செய்த போது தான் அண்ணா நகரில் கடத்தல் கும்பல் வந்த காரும், ராஜமங்களம் கொள்ளை வழக்கில் அந்த கும்பல் வந்த காரும் ஒன்று தான் என தெரியவந்துள்ளது.

300 crore looted by robbers who  jot jail

இதையடுத்து காரில் உலாவிய கும்பல் பயன்படுத்திய செல்போன் நெட்வொர்கை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த ஆறு பேரை கைது செய்துள்ளனர். இதில் ஆந்திராவில் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் சுனில் தான் முதலில் சிக்கி கொள்கிறான். அவனிடம் நடத்திய விசாரணையில் அயப்பாக்கத்தை சேர்ந்த மைக்கல் என்பவன் தலைமையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக கிருஷ்ணன் இவரது சந்தையில் சுமார் 40 கடைகளில் வரும் வாடகை பணம், இவரது பாத்திர கடை மூலம் வரும் வருவாயை மூட்டை மூட்டையாக வீட்டில் 300 கோடி வரை வைத்திருப்பதாக தகவலை குடிநீர் கேன் வியாபாரம் செய்யும் மைக்கேலிடம் , பழ வியாபாரியான நவா என்கிற நவராஜ் கூறியுள்ளார், மேலும் நவராஜா தனது அண்ணன் மகன் ஷாம் பிரகாஷிடம் கூறி கொள்ளையடிக்க திட்டம் போடுகின்றனர். தொழிலதிபர் கிருஷ்ணன் பற்றி தெரிந்துகொள்ள சாம்பிரகாஷ் அவரது மார்க்கெட் சென்று கண்காணித்து வந்துள்ளார் அந்த மார்க்கெட்டில் முன்பு கடை நடத்தி வந்த கன்னிசாமி என்ற வியாபாரிக்கும், தொழிலதிபர் கிருஷ்ணனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் இருப்பதை தெரிந்து கொண்ட ஷாம் பிரகாஷ் கன்னி சாமிக்கு உதவுவதாக கூறி, கிருஷ்ணனிடம் சென்று பணம் கேட்டு கட்டபஞ்சாயத்து செய்துள்ளான். அடிக்கடி சென்று பணம் விவகாரம் தொடர்பாக பேசி, அவரை கண்காணித்து கிருஷ்ணனின் வீடு, குடும்ப உறுப்பினர்களை தெரிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி மாலை கிருஷ்ணன் தனது மகனுடன் சந்தையில் இருப்பதை தெரிந்து கொண்டு கொள்ளை அடிக்க திட்டம் ஜமீன் பல்லாவரத்தில் வாடகைக்கு எடுத்த எக்ஸ்யூவி ரக கார் ஒன்றில் போலி பதிவெண்ணை மாற்றி கொண்டு, சுனில், விஜயக்குமார், மதன், கமலக்கண்ணன், விஜயக்குமார் மற்றும் விஜய் ஆகிய ஏழு பேரும் கிருஷ்ணனின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டின் முதல் தளத்திலிருந்த கிருஷ்ணனின் இளைய மகளான 17 வயது சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டி வாய், கைகளை கட்டிபோட்டு பீரோ சாவியை எடுத்து அதிலிருந்த பணத்தை சாக்குப்பையில் கட்டி எடுத்துக்கொண்டு காரில் தப்ப முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணனின் மகன் வீட்டிற்கு வர, கொள்ளை கும்பல் தப்பி ஓடும் போது கொள்ளையடித்த பண மூட்டையை தவற விட்டு, சுமார் 50 ஆயிரம் பணத்துடன் காரில் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் தப்பிச் சென்ற காரின் போலி பதிவெண் தான் பின்னர் சிக்குவதற்கு முக்கிய தடயமாக மாறியுள்ளது.

சுனில் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஷாம் பிரகாஷ் , விஜய், பாக்சர் விஜயக்குமார் உள்ளீட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.