Advertisment

30 டூவிலர்கள் - 4 கார் திருடன்... சிக்கினான் திருச்சியில்!!

திருவெறும்பூர் மற்றும் திருச்சி பகுதியில் மூன்று மாதங்களில் 30 டூவீலர்கள்4 கார் களை திருடிய பிரபல திருடனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளதோடு அவனிடமிருந்து 2 கார் 30 டூவீலர்களை பறி முதல் செய்துள்ளனர்.

Advertisment

திருவெறும்பூர் குற்றச்செயல்களில் கூடாரமாகவும், சமூக விரோத செயல்களில் பிறப்பிடமாகவும் உள்ளது என்றால் மிகையாகாது.

இந்நிலையில் திருவெறும்பூர் வட்டார காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவை கடந்த மூன்று மாதங்களாக திருட்டு போயிருந்தது. திருடர்களை பிடிக்க முடியாமல் திருவரம்பூர் வட்டார போலீசார் திணறி வந்தனர்.

  30 Two-wheelers - 4 car thieve arrest

Advertisment

அதன் அடிப்படையில் திருச்சி சரக டிஜஜி பாலகிருஷ்ணன், எஸ்பி ஜியா கு உல் ஹக் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் ஏஎஸ்பி பீரவீன் உமேஷ் டோங்ரே மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60) இவர் இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் கடந்த 20ம் தேதி திருவெறும்பூர் ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு தனது இருசக்கர வாகனத்தை ரயில்நிலையம் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

  30 Two-wheelers - 4 car thieve arrest

இச்சம்பவம் குறித்து ஆறுமுகம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து தேடிவந்தனர்.

இந்த நிலையில் 01.12.2019 இரவு திருவெறும்பூர் மலைக்கோயில் பகுதியில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் படியாக பைக்கில் வந்த தஞ்சை மாவட்டம் நடுபடுகை வீரசிங்கம்பேட்டை சேர்ந்த அகஸ்டின் என்பவரை வழிமறித்து பிடித்துள்ளனர். மேலும் அவருடன் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். அப்பொழுதுதான் ஆறுமுகத்தின் பைக்கை திருடிய வழக்கில் தேடப்படும் குற்றவாளி அகஸ்டின் என்பது திருவெறும்பூர் போலீசாருக்கு தெரிய வந்தது.

அதனடிப்படையில் அகஸ்டினை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் திருவெரும்பூர் போலீசார் அகஸ்டினிடம் முறையான விசாரணை நடத்தியபோது பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த 2009-ம் ஆண்டு அகஸ்டின் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் 10 பைக்குகளை திருடிய வழக்கில் தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், தண்டனை முடிந்து வெளியில் வந்த அகஸ்டின் மயிலாடுதுறை பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாகவும் அப்போது மயிலாடுதுறை போலீசார் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைத்ததாகவும்.

  30 Two-wheelers - 4 car thieve arrest

தண்டனை முடிந்து வெளிய வந்த அகஸ்டின் மன்னார்குடி பகுதியில் தனது இரண்டாவது மகளின்கணவன் கேன்டில் ராஜாவோடு சேர்ந்து 15 பைக்குகளை திருடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும். அதன்பின் அகஸ்டின் புதுக்கோட்டை பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் திருடியதாகவும் அதில் கைது செய்யப்பட்டு அகஸ்டின் சிறையில் இருந்தப்போது தன்னுடன் சிறையில் இருந் அவனின் மனைவியோடு தொடர்பு ஏற்பட்டதாகவும்.

இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு புதுக்கோட்டை சிறையில் இருந்து வெளியில் வந்த அகஸ்டின் அந்தப் பெண்ணுடன் கரூரில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் அதன்பிறகு கடந்த 3 மாதங்களாக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், 3 டூவீலர்கள், திருவெறும்பூர் பகுதியில் 4 டூவீலர், துவாக்குடி மணிகண்டம் தலா ஒரு டூவீலர்கள், லால்குடி பகுதியில் இரண்டு, கரூர் பகுதியில் 4, காங்கேயம், கும்பகோணம், செங்கிப்பட்டி, பகுதிகளில் 3 டூவீலர்களும், திருச்சி ஜங்சன் பகுதியில் 10 டூ வீலர் மற்றும் 2 கார்களையும் திருடியதை ஒப்புக் கொண்டான்.

மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அகஸ்டின் பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் கூடும் இடம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை திருடுவதாகவும் அப்படி திருடும் போது இருசக்கர வாகனங்களில் பூட்டை உடைப்பது கிடையாது என்றும் பத்துக்கும் மேற்பட்ட சாவிகளை கையில் வைத்திருப்பதாகவும் அந்த சாவியை போட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை திருடியதாகவும் அப்படி திருடிய இருசக்கர வாகனங்களை தஞ்சை கீழவாசல் பழைய இரும்பு கடை வியாபாரி கனகராஜ், பூதலூர் சேர்ந்த அப்பு (எ) பத்மநாபன் ஆகியோரிடம் விற்பனை செய்ததும்,

  30 Two-wheelers - 4 car thieve arrest

கார்களை கரூர் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த ராமசாமியிடம் விற்றதாகவும் டூ வீலர்களை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரத்திற்கும், கார்களை 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்றதாக கூறியுள்ளான்.

மேலும் ஒரு பகுதியில் திருடி போலீசாரிடம் பிடிபட்ட பிறகு அந்த பகுதியில் மீண்டும் திருடுவதற்கு செல்லவில்லை என்று சொல்வதில்லை என்றும் மேலும் ஒருவரிடமே திருடும் பொருட்களை விற்பது இல்லை என்றும் பலரிடம் இருப்பதாகவும் அகஸ்டின் கூறியுள்ளான்

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து அவனிடமிருந்து 30 இருசக்கர வாகனங்கள் 2 கார்கள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி ஜங்சன் பகுதியில் திருடப்பட்ட 2 கார்களை பழைய இரும்பு வியாபாரி உடைத்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அகஸ்டினை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் திருவெறும்பூர் போலீசார் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

arrest police thiruchy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe