Advertisment

ஒரு லட்சம் கட்டினால் மாதம் 30 ஆயிரம்; ஆருத்ரா முகவரை நையப்புடைத்த பொதுமக்கள்

30 thousand per month if showing one lakh; Citizens who have identified Arudra Agent

தமிழகத்தில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சென்னை மணலியில் உள்ள ஆருத்ரா முகவரின் வீட்டுக்குச் சென்ற பொதுமக்கள் ஆத்திரத்தில் அவரை கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மணலியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆருத்ரா நிதி நிறுவனமேலாளராக இருந்தவர் யோகானந்தம். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டை சூழ்ந்த சிலர் கல் வீச்சில் ஈடுபட்டனர். முகவரின் சகோதரரையும் மரத்தில் கட்டிப் போட்ட பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு திரண்டு வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisment

மணலி ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் 30000 ரூபாய் வட்டி தரப்படும் என்றஅறிவிப்பை நம்பி தாங்கள் பணத்தை முதலீடு செய்ததாகவும், தங்களை ஏமாற்றி விட்டதாகவும் கடந்த ஆறு மாதமாக நிறுவனம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் எங்களது பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு முகவரின் வீட்டை முற்றுகையிட்டதாகவும்பொதுமக்கள் தெரிவித்தனர்.

aarudhra people police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe