கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. திருச்சி தற்போது, தமிழக அரசு அறிவித்துள்ள, சிவப்பு மண்டல பகுதியில் இருப்பதால் இன்னும் ஒரு படி மேலே மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நேரத்தில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 30 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். பொய் வழக்கில் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நாங்கள் தற்போது தண்டனைக் காலம் முடிந்தும் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம் என குற்றச்சாட்டுகளை சொல்லி ஊரடங்கால் உதவியின்றி தவிக்கும் குடும்பத்தினாரோடு வாழ அனுமதிக்க வேண்டும் என்றும், இடைக்கால பிணையில் விடுவிக்க கோரியும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.