face

கலைஞர் மருத்துவமனைக்கு வந்த 30 நிமிடத்தில், 120/80 என இரத்த அழுத்தம் சீரானது என நக்கீரன் ஆசிரியர், நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,

திமுக தலைவர் கலைஞருக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிட்டது என இரவு 12 மணி அளவில் தகவல் வந்ததும் மிகுந்த பதட்டத்துடன் கோபாலபுரம் சென்றோம். அங்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என ஆம்புலன்ஸ் வந்தது.

Advertisment

உண்மையில் அவர் அறையில் இருந்து கீழ் கொண்டுவந்த போது கவலைக்கிடமான நிலையில்தான் இருந்தார். ஆனால் மருத்துவமனை வந்த ஒரு 30 நிமிடத்தில் மிக குறைவாக இருந்த இரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக சீராகி, தற்போது 120/80 என்ற சராசரி நிலைக்கு அவர் வந்துவிட்டார். இது அவரது உடல்நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம். இதன் மூலம் அவர் காலம் கடந்து நிற்பார் என்ற பெரும் நம்பிக்கை அனைவருக்கும் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.