Skip to main content

நகைகளை ஏலமெடுத்து தருவதாக 30 லட்சம் ரூபாய் அபேஸ்; 5 பேர் கைது

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

30 lakhs for auctioning jewels; 5 people arrested

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஏலத்திற்கு வரும் நகைகளை குறைந்த விலையில் எடுத்து தருவதாக மோசடி செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய நண்பர் தனசேகரன் மூலம் நாமக்கல்லை சேர்ந்த சிவஞானம் என்பவர் அறிமுகமானார். ராசிபுரத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 160 சவரன் நகைகள் ஏலத்திற்கு வருகிறது. எனக்கு உயரதிகாரியான புவனேஸ்வரியை தெரியும். அவரிடம் பேசி 30 லட்சம் ரூபாய்க்கு நகைகளை ஏலத்தில் எடுத்து தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

இதனை நம்பிய ஜெகநாதன் 30 லட்சம் ரூபாயை தனசேகரிடம் கொடுத்துள்ளார். வங்கி வாசலில் தொழிலதிபர் ஜெகநாதனையும், தனசேகரனையும், சிவஞானத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே சென்ற புவனேஸ்வரி பணத்துடன் தப்பிச் சென்றார். உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சிவஞானம், தனசேகரன் ஆகியோர் வங்கிக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்திலேயே எருமைப்பட்டி அருகே புவனேஸ்வரியை போலீசார் மடக்கினர். சிவஞானமும் இந்த கூட்டுச் சதியில் தொடர்பிலிருந்து தெரியவந்து சிவஞானம், புவனேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 22 லட்சம் ரூபாயை மீட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பசுமாட்டின் வாயில் வெடித்த நாட்டு வெடிகுண்டு - இருவர் கைது 

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Two people were arrested for storing

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மஞ்சுளா தம்பதியினரின் பசுமாடு ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. அப்போது, அங்கே நிலத்தில் ஏதோ காய் எனக் கடித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.

இது குறித்து  உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்  குப்புராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24) மற்றும் அங்கியாபள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்குகளை வேட்டையாட விவசாய நிலங்களில் ஆங்காங்கே நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதும். அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாட்டின் வாய் மற்றும் தாடை கிழிந்ததும் தெரியவந்தது. 

இவர்கள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

இரண்டு மாநில காவலருக்கு விபூதி அடித்த கும்பல்; சுற்றிவளைத்த தமிழக போலீஸ்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
gang was arrested for smuggling cannabis from Odisha to Vellore

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திரா எல்லைப்பகுதியான உள்ளிப்புதூர் அருகே வேலூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வாகன சோனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இரண்டு இருச்சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 4 இளைஞர்களை மடக்கி சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து.

அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருச்சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடந்து விசாரணை செய்தனர். அதில், நான்கு இளைஞர்களும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவைச் சேர்ந்த விஜய்(23) ரிஷிகுமார்(20), நெடுஞ்செழியன்(23) விக்னேஷ்(25) ஆகியோர் என்பதும், அவர்கள் 10 கிலோ கஞ்சாவை ஒடிசா மாநிலம் அனாங்காப்பள்ளி பகுதியில் இருந்து இரயில் மூலம் ஆந்திரா மாநிலம் சித்தூர் வரை கடத்திவந்து, அங்கிருந்து இரண்டு இருச்சக்கர வாகனத்தில் வேலூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. 

இளைஞர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.