Advertisment

வியாபாரியை வழிமறித்து 30 லட்சம் ரூபாய் வழிப்பறி; 4 பேர் கைது

30 lakh rupees were stolen by waylaying the trader; 4 arrested

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை மசூதி தெருவைச் சேர்ந்தவர் பராஸ் அகமது (29). இவர் ஆம்பூரில் பழைய இரும்பு மற்றும் தோல்பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் பலர் இவருடைய கடையில் இருந்து இரும்பு, தோல்பொருட்களை தவணையில் வாங்கி செல்வதும், அதற்கான பணத்தை சில நாட்களில் பராஸ் அகமது நேரில் சென்று வசூலிப்பது வழக்கம்.

அதன்படி கடந்த 7-ம் தேதி இரவு பராஸ் அகமது வேலூர் பி.எஸ்.எஸ்.கோவில் தெருவில் கடை வைத்துள்ள சில வியாபாரிகளிடம் கொடுத்த பொருட்களுக்கான பணத்தை வசூலிப்பதற்காக ஆம்பூரில் இருந்து காரில் வந்துள்ளார். பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் காரை நிறுத்தி விட்டு அவர் அங்குள்ள வியாபாரிகளிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை வசூல்செய்து அதனை ஒரு பையில் வைத்து கொண்டு பராஸ் அகமது காரை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் திடீரென அவரை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் பாரஸ் அகமது வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாரஸ் அகமது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் சப்&இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோர் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தொடர் விசாரணை நடத்தி வழிபறியில் ஈடுபட்ட வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சரத்குமார் (28), தினேஷ் (30), பிரசாந்த் (26), கோகுல் (26) ஆகிய 4 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.

Advertisment

அவர்களிடமிருந்து ரூபாய் 22-லட்சம் பணத்தைய மற்றும் 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் இது போல் வேறு ஏதாவது கொள்ளை வழக்கில் சிக்கி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Robbery thirupathur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe