Advertisment

சிக்கியது எப்படி? பொதிகை எக்ஸ்பிரஸில் அதிர்ச்சி!

 30 kg trapped; shock at Madurai railway station

Advertisment

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பல கோடிரூபாய் மதிப்பு கொண்டபோதைப் பொருள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்த சென்னையைச் சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம்வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர் வைத்திருந்த பெரிய அளவிலான லக்கேஜ் பேக்கில் 30 கிலோ எடை கொண்ட மெத்தபட்டமைன் எனும் போதைப் பொருள் சிக்கியது.

இதன் மதிப்பு பல கோடி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மதுரை ரயில் நிலையத்தில் இறங்க இருந்த சிலமன் பிரகாஷைபிடித்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. டெல்லியிலிருந்தே சிலமன் பிரகாஷ் கண்காணிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி மதுரை வந்தபோது பின் தொடர்ந்து வந்த அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்து இருப்பது தெரியவந்தது.

Advertisment

அண்மையில் சினிமா தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியாகவும் இருந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மதுரையில் அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation Delhi Drugs madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe