முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது! 

30 arrested, including aide to former minister OS Maniyan

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளர் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே, வங்கி போன்ற அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவருவதாக காவல்துறைக்குப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதுவரை தமிழ்நாடு முழுவதும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயரில் மோசடியில் ஈடுபட்ட ஹரிநாத், தலைமைச் செயலகத்தின் ஊழியர் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மனைவி உள்ளிட்ட 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

admk JOBs leaders Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe