வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி மாயம்!

3 year-old girl who was playing front of her house has disappeared

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயி தரணி - பிரியா தம்பதியினர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஜெயப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இதனிடையே நேற்று இரவு வீட்டின் முன் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பிரியா வீட்டுக்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது தனது 3 வயதுக் குழந்தை ஜெயப்பிரியா காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து தரணி அவரது மனைவி பிரியா மற்றும் அவர்களது உறவினர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்குத் தேடியும் கிடைக்காததால் காணாமல் போன குழந்தை குறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காணாமல் போன குழந்தையை போலீசார் மற்றும் அவர்களது உறவினர்கள் தேடி வருகின்றனர். குழந்தை யாராவது கடத்தினார்கள்? அல்லது குழந்தை வழி தெரியாமல் வேறு எங்கேயாவது சென்று விட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police Vellore
இதையும் படியுங்கள்
Subscribe