Advertisment

13 வயது சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு!

A 3-year-old girl after being hit by a two-wheeler driven by a 13-year-old boy!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம், புது ஆதண்டார்கொல்லை கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவரின் 3 வயது மகள் மலர்விழி. குழந்தை மலர்விழி வீட்டு வாசல் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அதே கிராமத்தில் வசிக்கும் சிவகுரு என்பவரின் மகனும், எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய 13 வயது சிறுவனுமான கதிர்வாணன் அவ்வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் குழந்தை மலர்விழி மீது மோதி, 20 அடி தூரம் குழந்தை இழுத்துச் செல்லப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்த, மங்கலம் பேட்டை காவல்துறையினர், விரைந்து சென்று விபத்தில் இறந்து போன குழந்தையை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விபத்து ஏற்படுத்திய 13 வயது சிறுவன் கதிர்வாணன் மற்றும் அவரது தந்தை சிவகுருவை மங்கலம்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisment

BB

மூன்று வயது குழந்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தைசோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் தமிழக அரசு 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

police bike Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe