Advertisment

தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய கிராமம்

3-year-old child incident  in private school van collision; A sad village

Advertisment

கடலூரில் தனியார்பள்ளிபேருந்து மோதி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் மேற்கு ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது குழந்தை தேஜேஸ்வரன். நேற்று குழந்தை தேஜேஸ்வரன் சாலையைக் கடக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக குழந்தையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை தேஜேஸ்வரன் உயிரிழந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று வயது குழந்தை பள்ளி பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

incident police Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe