Advertisment

தெரியாமல் காலை வைத்த 3 வயது சிறுவன்; தேனியில் நிகழ்ந்த துயரம்

A 3-year-old boy unknowingly put his foot down; a tragedy in Theni

Advertisment

தேனியில் மூன்று வயது சிறுவன் மின் மோட்டாரின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தெற்கு தெருபகுதியைச் சேர்ந்த மொக்கபாண்டியன் என்பவர்குடிநீரை தன்னுடைய வீட்டின் மேல் தொட்டிக்கு நிரப்புவதற்காக மின் மோட்டார் வழியாக தண்ணீரை ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் இளமாறன், மின் மோட்டாரின் வயரில் தெரியாமல்கால் வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவனை உடனடியாக மீட்கப்பட்டு தேவனாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தேவனாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மின்மோட்டார் வயரை மதித்து 3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

children electicity police Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe