Advertisment

கனமழையால் வீடு இடிந்து விழுந்து 3 வயது ஆண் குழந்தை பலி!

 3-year-old boy passed away after the house collapsed due to heavy rain.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகேகனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்த 3 வயது ஆண் குழந்தை, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (டிச. 16) உயிரிழந்தது.

Advertisment

சேலம் மாவட்டம் கருமந்துறை மேல்நாடு மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் குண்டுமணி (35). இவருடைய மனைவி ராமாயி (32). இவர்களுக்குகவுசிக் (3) என்ற ஆண் குழந்தை இருந்தது.டிசம்பர் 12 ஆம் தேதி காலை 9 மணியளவில், தனது வீட்டில் ராமாயி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் ராமாயி மற்றும் குழந்தை கவுசிக் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இதில் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

Advertisment

மாண்டஸ் புயலால்சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்ததால் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த குழந்தைகவுசிக் வெள்ளிக்கிழமை (டிச. 16) அதிகாலையில் உயிரிழந்தான். குழந்தையின் தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

cyclone rain Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe