Advertisment

திருமண கொண்டாட்டத்தில் நடந்த துயரம்; கிணற்றில் விழுந்து 13 பெண்கள் உயிரிழப்பு

jkl

Advertisment

திருமண நிகழ்வின் போது மூடியிருந்த கிணற்றில்13 பேர் தவறி விழுந்துஉயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது

உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வீட்டில் வெளியே மேடை அமைத்து நடைபெற்ற திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். அப்போது திருமண வீட்டுக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு இடையே இருந்த கிணற்றை கட்டை மற்றும் மூடி போட்டு திருமண வீட்டார் மூடிவைத்துள்ளனர். தரை பகுதியோடு கிணறு இருந்ததால் பலருக்கு அங்கு கிணறு இருப்பதே தெரியவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற பெண்கள் மூடியிருந்த பகுதியின் வழியாக செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது திடீரென கிணற்றில் இருந்த கட்டைகள் உடைந்ததால் 13 பேர் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தனர். இதனால் திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், கிணற்றில் விழுந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

marriage
இதையும் படியுங்கள்
Subscribe