Advertisment

பாலியல் தொழில் வழக்கில் 3 பெண்கள் கைது! விருதுநகரில் மீண்டும் பரபரப்பு!

3 women arrested in the case of sex work!

பாலியல் தொழில் வழக்கில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் விருதுநகரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத் தலைவி அமல்ராணியும்அவருடைய கணவர் சந்திரசேகரனும் பாலியல் தொழிலில் ஈடுபட பிறரைத் தூண்டிய வழக்கில்விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீசாரால் கடந்த மாதம்கைது செய்யப்பட்டனர். தற்போது விருதுநகர் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் தென்றல் அளித்த புகாரின் பேரில்அதே பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் மூன்று பெண்கள் கைதாகியிருக்கின்றனர்.

Advertisment

விருதுநகர்வடமலைக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரை தளத்திலும்மாடியிலும் பாலியல் குற்றங்கள் நடந்து வருவதாகக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ராஜேஸ்வரி என்பவர் இரண்டு பெண்களை வைத்து அந்த வீட்டின் தரை தளத்திலும், முனீஸ்வரி என்பவர் மூன்று பெண்களை வைத்து மேல் தளத்திலும்ஐந்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. சகாயராணி என்பவர் இடைத்தரகராக இருந்துஅந்த வீட்டுக்கு 9 வாடிக்கையாளர்களை அழைத்து வந்துபணம் வாங்கிக் கொண்டு அத்தொழிலில் ஈடுபட்டதும்தெரியவந்துள்ளது.

விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி ராஜேஸ்வரி, முனீஸ்வரி, சகாயராணி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Virudhunagar police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe