3 tourists, including a woman,passed when a car and a truck collided head-on

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு புறவழிச் சாலையில் இன்று அதிகாலை கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் மூன்று பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ரபிக் தனது நண்பர்களுடன் மூணாறு செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார் வத்தலக்குண்டு புறவழி ச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கேரளாவிலிருந்து டீத்தூள் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியும் காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன இதில் காரில் பயணம் செய்த ரபிக், சமீரா பானு, வீரமணி உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

இது சம்பந்தமாக வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.சாலை விபத்தில் சுற்று லா பயணிகள் மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.