ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வனச்சரக அலுவலர் கந்தசாமிக்கு வந்த தொலைபேசி தகவலில்சோளிங்கர் அடுத்த பானாவரம் காப்புக்காடு பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அதன் அடிப்படையில் வனத்துறையினர் நடத்திய தேடல் வேட்டையில் காப்புக்காட்டில் ஒருபகுதியில் செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர்.
அதனை கைப்பற்றி தங்களது அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அதன் மொத்த எடை 3 டன் எனக்கூறுகின்றனர். இந்த செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.