3 policemen, including sub-inspector, jailed for 10 years each! - Sensational verdict in Dindigul court !!

போலீசார் தாக்கியதில் கைதி உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் பரபரப்புதீர்ப்பளித்துள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவர் கடந்த 5.4.2010 அன்று வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.தனது ஊர் திருவிழாவிற்கு சென்றபோது செந்தில்குமார் என்பவர் தன்னை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். அதனையடுத்து வடமதுரை போலீசார் செந்தில்குமாரைகைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது செந்தில்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

போலீசார் தாக்கியதால் தான் செந்தில்குமார் உயிரிழந்தார் என கூறி அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அதனையடுத்து சென்னை தடவியல் நிபுணர்கள் செந்தில்குமார் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது செந்தில்குமாரின் உடலில் காயங்கள் இருந்தது. சிபிசிஐடி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி சம்பவத்தன்று பணியிலிருந்த வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் திருமலை, காவலர்கள் முத்துச்சாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Advertisment

இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் திருமலை, முத்துச்சாமி உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.