Advertisment

திருச்சி டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் 3 பேர் சேலம் கோர்ட்டில் சரண்!

திருச்சி டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் சேலம் நீதிமன்றத்திர் சரணடைந்தனர்.

Advertisment

திருச்சி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (30). டிராவல்ஸ் அதிபர். இவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுப்பி வைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அண்ணா நகரில் இவருக்குச் சொந்தமான சில கடைகளும் இருக்கின்றன.

Advertisment

3 persons in Salem court

இந்நிலையில் கடந்த 6ம் தேதி மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில், திருச்சி அண்ணா நகரைச் சேர்ந்த கோபால் என்கிற குஞ்சு கோபால் (26), மேஷாக் (26), உறையூர் காவேரி நகர் கலைச்செல்வன் (30) ஆகியோரை தேடி வந்தனர்.

இவர்கள் மூன்று பேரும், சேலம் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வியாழக்கிழமை (ஜன. 9) நேற்று சரணடைந்தனர். மூவரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் சிவா உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Salem Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe