/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_147.jpg)
அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட ஈரோடு பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள பொதுக்கழிப்பிடம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையை அடுத்துள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (20), ஈரோடு, வீரப்பன் சத்திரம், மாரப்பன் வீதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (20), ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (21) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1,800 மதிப்பிலான 180 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ.500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)