Advertisment

கொள்ளிடம் ஆற்றில் நடந்த சோகம்!

3 people lost their lives in Kollidam river

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரது மகன்கள் சந்தோஷ்(13), சந்திரன்(10). இருவரும் தங்கள் வீட்டிற்குநிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகள் சுமார் 10 பேருடன் நேற்று காலை திருமானூர் கொள்ளிடம் ஆற்றிற்குச் சென்று குளித்துள்ளனர். இந்த நிலையில்,சிறுவர்களில் சிலர் புதை சூழலில் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற மற்ற சிறுவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 10 சிறுவர்களும்சூழலில் மாட்டிக்கொண்டனர்.

Advertisment

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் 7 பேரைக் காப்பாற்றினர். ஆனால் மூன்று பேரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உடனடியாக அரியலூர் திருவையாறு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியைத்தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் தேடிய பிறகு 3 பேரில் அம்பத்தூரை சேர்ந்த தீபக்(17), தஞ்சாவூரை சேர்ந்த பச்சையப்பன் ஆகிய இருவரின் உடலை மீட்டனர்.

Advertisment

இரவு நேரம் நெருங்கிவிட்டபடியால் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் குழுவினர் இணைந்து மீண்டும் தேடினர். அதில் இன்று காலை மூன்றாவது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த இளம்பிள்ளைகள் கொள்ளிடம் ஆற்றுச்சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Kollidam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe