Skip to main content

கொள்ளிடம் ஆற்றில் நடந்த சோகம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
3 people lost their lives in Kollidam river

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரது மகன்கள் சந்தோஷ்(13), சந்திரன்(10). இருவரும் தங்கள் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகள் சுமார் 10 பேருடன் நேற்று காலை திருமானூர் கொள்ளிடம் ஆற்றிற்குச் சென்று குளித்துள்ளனர். இந்த நிலையில், சிறுவர்களில் சிலர் புதை சூழலில் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற மற்ற சிறுவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 10 சிறுவர்களும் சூழலில் மாட்டிக்கொண்டனர்.

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் 7 பேரைக் காப்பாற்றினர். ஆனால் மூன்று பேரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உடனடியாக அரியலூர் திருவையாறு தீயணைப்புத் துறையினருக்குத்  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியைத் தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் தேடிய பிறகு 3 பேரில் அம்பத்தூரை சேர்ந்த தீபக்(17), தஞ்சாவூரை சேர்ந்த பச்சையப்பன் ஆகிய இருவரின் உடலை மீட்டனர். 

இரவு நேரம் நெருங்கிவிட்டபடியால் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் குழுவினர் இணைந்து மீண்டும் தேடினர். அதில் இன்று காலை மூன்றாவது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த இளம்பிள்ளைகள் கொள்ளிடம் ஆற்றுச்சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில் படிக்கட்டில் பயணம்; மணல் பரப்பில் சடலமாக கிடந்த இளைஞர்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Travel on the train stairs; A young man lying on the sand

 

ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பாபநாசம் செல்வதற்காக ஏறிய இளைஞர் ஒருவர் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். சீர்காழிக்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த பொழுது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு இருந்து பயணம் செய்த அந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் யாரும் கவனிக்காமல் விட்டனர். திடீரென உடன் வந்தவர்கள் தங்களுடன் வந்த இளைஞரை காணவில்லை என மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் பகுதிக்குச் சென்று பார்த்தபோது ஆற்றின் மணல் பரப்பில் இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த அப்பாஸ் என்பது தெரியவந்தது.

 

 

 

Next Story

கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Public opposition to joint drinking water scheme

 

அரியலூர் - தஞ்சை மாவட்டங்கள் இடையே ஓடுகிறது கொள்ளிடம் ஆறு. இந்த ஆற்றில் ஆழ்குழாய் போர்வெல் போட்டு அங்கிருந்து நாகை மாவட்டத்திற்கு குடிதண்ணீர் கொண்டு செல்லும் பணிக்காக நேற்று காலை பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த துத்தூர், குருவாடி, தேளூர், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் ஆழ்குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

 

தகவல் அறிந்த கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே அளவுக்கதிகமான மணலை சுரண்டி எடுத்ததால் மழை நீர் தேட்க முடியாமல் ஆறு வறண்டு கிடக்கிறது. இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். அப்படி கட்டப்பட்டு தண்ணீர் தேங்கினால் வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும், அதுவரை நாகை மாவட்டத்திற்கு ஆழ்குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினர்.

 

போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60 பேரை கைது செய்த போலீசார், அவர்களை ஏலாக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அரியலூர் மாவட்ட எல்லையோரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.