தமிழகத்தில் நீர் நிலைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குளிக்க முற்படுகையில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் திருத்தணியில் கல்குவாரி குட்டையில் ஒரு பெண், 2 சிறுமிகள் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா (65), ஹேமலதா(16), கோமதி(13) ஆகியோர் திருத்தணி பெரியார் நகரில்உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த போது, அருகிலுள்ள கைவிடப்பட்ட கல்குவாரிஅருகே இயற்கை உபாதை கழிக்கச்சென்றுள்ளனர். அப்பொழுது கல்குவாரியின் குட்டையில்மூழ்கி மூன்று பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மூன்று பேரின் உடலையும் தீயணைப்புத் துறை நூல் தற்போது கைப்பற்றி உள்ளனர்.