Published on 29/12/2021 | Edited on 29/12/2021

திருச்சி விமான நிலைய பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ்-கவிதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கவிதா மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் விமான நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் பழக்கரை பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குமாரை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் வீட்டிலிருந்து மாயமான பாலக்கரை பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரையும் பாலக்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.