சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு, பூசாரி சென்னிமலை வீதியைச் சேர்ந்த கணேசன் (46), சித்தோடு, செங்குந்தபுரம் மேற்கு வீதியைச் சேர்ந்த முத்துராமன் (56), பவானி, குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் (54) ஆகியோரை கையையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 29 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.