Advertisment

பெண்ணாடம் அருகே தனியார் பேருந்து மோதி 3 பேர் பலி!

hhg

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி பகுதிக்குட்பட்ட மருதத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி செல்வராணி மற்றும் உறவினர் ஆறுமுகம், விஜய் ஆகிய நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பெண்ணாடத்திலிருந்து மருதத்தூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேப்பூரில் இருந்து பெண்ணாடம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருக்கும்போது, மேலூர் அருகே வளைவில் தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த கருப்புசாமி, ஆறுமுகம் இரண்டு பேரும் பலியாகினர்.

கருப்புசாமியின் மனைவி செல்வராணி மற்றும் விஜய் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட, அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டுத் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் போகும் வழியில் விஜய் இறந்துள்ளார். ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் சென்று 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe