Advertisment

ஏழைகளை குறிவைக்கும் 3 நம்பர் லாட்டரி... 5 பேர் கைது!

thiruchy

மூன்று நம்பர்லாட்டரிசீட்டு விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், திருச்சியில் அது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

மூன்று நம்பர்லாட்டரிசீட்டில் கடைசி ஒரு இலக்கம் இருந்தால் 100 ரூபாய், இரண்டு இலக்கம் இருந்தால் 1000 ரூபாய், மூன்று இலக்கமும் இருந்தால் 25,000 ரூபாய் பரிசு என ஏழை கூலித்தொழிலாளர்களைக்குறிவைத்துதிருச்சியின்பொன்மலை ரயில்வே பணிமனை அருகே உள்ளமளிகைக்கடைகளிலும், முட்புதர்களிலும்லாட்டரிசீட்டுகள்விற்கப்படுவதாகப்புகார் எழுந்தது. 30 ரூபாய், 60 ரூபாய், 120 ரூபாய் என்றவிலைகளில் ஒருநாளைக்குக்கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைநடைபெற்று வருவதாகப்புகார் எழுந்தநிலையில், இதுதொடர்பாகப்பொன்மலை காவல்நிலையத்தின்உதவி காவல் ஆணையர் காமராஜ் தலைமையிலானபோலீசார்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது முட்புதரில் மூன்று நம்பர்லாட்டரிவிற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கையும்களவுமாகக்கைது செய்தனர்.

Advertisment

3 Number lottery targeting the poor ...

திருச்சியின்பொன்மலையில் மட்டுமல்லாது, அரியமங்கலம்,திருவரும்பூர்ஆகிய இடங்களிலும் இதுபோன்றுமூன்று நம்பர்லாட்டரிசீட்டுகள் விற்கப்படுவதாகவும்,போலீசார்அங்கும்தேடுதல் வேட்டை நடத்திஅவர்களைப்பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

police thiruchy lottery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe