Skip to main content

3 மாத குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்: போலீசார் விசாரணையில் கணவர் கடும் அதிர்ச்சி

Published on 14/08/2018 | Edited on 27/08/2018
murder


கோவை சரவணம்பட்டி பகுதியில் 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாக குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் பெற்ற குழந்தையை தானே கொலை செய்து புதரில் வீசி பின்னர் கடத்தப்பட்டதாக  நாடகமாடிய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியில் கார்த்திக் மற்றும் வனிதா தம்பதியர் வசித்து வருகின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து முதல் குழந்தையை திண்டுக்கல் சிறுமலை பகுதியிலுள்ள வனிதாசின் தாய் வீட்டில் விட்ட வனிதா தனது மூன்று மாத குழந்தையான கவிஸ்ரீயை மட்டும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
 

 

 

கார்த்திக் கோவை ராமகிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சூழலில் வனிதா மற்றும் குழந்தை கவிஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மாலை வனிதா தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும் அப்போது தான் குளியலறையில் குளித்து கொண்டிருந்ததாகவும் தனது கணவருக்கு தகவலளித்துள்ளார்.
 

இதையடுத்து விரைந்து வந்த கார்த்திக் தனது மனைவி வனிதாவுடன் சென்று சரவனம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வனிதாவிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
 

அப்போது குழந்தையை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்ட வனிதா முதல் குழந்த பெண்ணாக இருந்ததால் இராண்டாவது ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்திருந்ததாகவும் ஆனால் இரண்டாவதும் பெண்ணாக பிறந்ததால் குடும்பத்தினர் மத்தியில் தான் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடுவோம் என எண்ணியதாக கூறியுள்ளார்.
 

மேலும் மூன்று மாத குழந்தை எப்போதும் அழுது கொண்டிருந்ததாகவும் இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியாதல் குழந்தையை கொன்று வீட்டின் பின்புறம் சுமார் 100 மீட்டர் தூரத்தில் குழந்தையை கொன்று வீசி விட்டதாகவும்  கூறியுள்ளார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புதர் பகுதியில் வீசப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் பெற்ற குழந்தையை கொன்று கடத்தல் நாடகமாடியை தாய் வனிதாவிடம் தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
 

 

 

போலீசாரின் தீவிர விசாரணையில் வனிதாவின் கணவர் மேலும் அதிர்ச்சியடைந்தார். 
 

வனிதாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன் என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்க கூடாது என்பதால் குழந்தையை கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தையின் உடலை குப்பை மேட்டில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் குழந்தை மாயமானதாக அனைவரிடமும் கூறி நாடகமாடி உள்ளார். இந்த நிலையில்தான் அவர் போலீசாரின் விசாரணையில் மாட்டிக்கொண்டார். கொலை செய்வதற்கு கள்ளக்காதலன் சீனிவாசன் உடந்தையாக இருந்தாரா? என்று அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற குழந்தையை தாயே கொன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.