/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4464.jpg)
ராஜஸ்தான் மாநிலம், ஜாரூர் மாவட்டம், ஜாரம்பூரை சேர்ந்தவர் பீராராம் (25). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கடந்த 2021ல் திருமணம் நடைபெற்றது. அதன்பின் கடந்த 2022ல் ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி, மாதம்பாளையம் வந்த பீராராம், பவானிசாகர் பிரிவில் பேன்ஸி ஸ்டோர் வைத்து நடத்தி வந்தார். பீராராமின் மனைவி கீதாவுக்கு கடந்த 20-9-2023-ல் அவரது சொந்த ஊரில், பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, கடந்த 10-ம் தேதி சொந்த ஊரில் இருந்து ரயில் மூலமாக குழந்தையுடன் மாதம்பாளையத்துக்கு வந்தனர். பின்னர் 19ம் தேதி மாதம்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 26ம் தேதி இரவு குழந்தை ஓயாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. அதனால், புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தையை காண்பித்துள்ளனர். அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர், உயர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக குழந்தையை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து, பீராராம் அளித்த புகாரின் பேரில், புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)