Skip to main content

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

 

3 lakh each to the families of the three who lost life in Jallikattu


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களிலும் ஜல்லிக்கட்டானது நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் 3 குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

புதுக்கோட்டை கே.ராயவரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் உயிரிழந்த கணேசன் என்பவர் குடும்பத்திற்கும், சிவகங்கை சிராவயலில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயிரிழந்த பூமிநாதன் குடும்பத்திற்கும், தர்மபுரி தடங்கம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த கோகுல் என்பவரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவியை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

 

இதை படிக்காம போயிடாதீங்க !