Advertisment

திருச்சி அருகே இடி தாக்கி 3 பேர் காயம்!

்

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில், நேற்று இரவு முதல் விடிய விடியத்திருச்சியின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட இனாம் குளத்தூர் ஊராட்சியில் இருக்கக்கூடிய சின்ன ஆலம்பட்டி சேர்ந்த செல்வம் என்பவர் வீட்டில் கனமழை காரணமாக இடி விழுந்தது.

Advertisment

இதில் வீட்டில் இருந்த மின்விசிறி மற்றும் கதவு என அனைத்தும் சேதம் அடைந்தது. இடி தாக்கியதில் செல்வம் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆனந்தகுமார் செல்வகுமார் இந்திரா ஆகியோர் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்களை அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

thunder
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe