3 goverment officials transferred action by election commision

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மீதும், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் மற்றும் திருச்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர்மீதும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார் வந்ததையடுத்து, மூன்று பேரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேரையும் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

Advertisment

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மாற்றாக, திருச்சியின் புதிய மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி, திருச்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக மயில்வாகனன், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியராக விசு மஹாஜன் உள்ளிட்ட மூன்று பேரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.