/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hkjl_7.jpg)
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் முகமது ரியாஸ், முகமது தல்கா, முகமது நவாப் இஸ்மாயில், முகமது அசாருதீன், ஃபிரோஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேருக்கும் நவம்பர் எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இவர்களை விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் மூன்று நாட்கள்விசாரிக்க காவல்துறைக்கு கோவை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)