Advertisment

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்... மாவு மில்லில் 3 கோடி ரூபாய் மோசடி!

3 crore rupees fraud in flour mill!

Advertisment

தர்மபுரி அருகே, தனியார் மாவு அரைக்கும் ஆலையில் தயாரிக்கப்படும்மாவைக்கள்ளச்சந்தையில் விற்பனை செய்து 3 கோடி ரூபாய் மோசடி செய்த 8 ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டிஅருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தென்னரசு (வயது 39). இவர், சொந்தமாக மாவு அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர், மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ''என்னுடைய உறவினர் எழில் பிரகாஷ்என்பவரைக்கடந்த 2018- ஆம் ஆண்டு, மாவு அரைக்கும் ஆலையில் மேலாளராக நியமித்தேன். ஆனால் கடைகளுக்கு அனுப்பி வைக்கக் கூடியமாவைக்கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.இந்த மோசடியில் மேலும் 7பேருக்குத்தொடர்பு உள்ளது. இதன் மூலம் 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.

Advertisment

அதன்பேரில், காவல்துறையினர் எழில் பிரகாஷ் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

money police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe