/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_181.jpg)
மூன்று சிறுவர்கள் ஊரப்பாக்கம் பகுதியில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் ஊரப்பாக்கம் பதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சுரேஷ், ரவி என்று இருமகன்கள் உள்ளனர். இருவரும்செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள். இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுமுறை நாள் என்பதால், பெற்றோரை பார்க்க ஊரப்பாக்கத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது சுரேஷ், ரவிமற்றும் அவரது நண்பர் மஞ்சுநாத் மூவரும் ஊரப்பாக்கம் தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்துகொண்டிருந்த மின்சாரரயில் தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்த மூவரையும் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மஞ்சுநாத் வாய் பேச முடியாதவர்.மூன்று மாற்றுத்திறனாளி சிறுவர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)