car

Advertisment

நெல்லையில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் ஒரே காரில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ளது லெப்பைக்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மூன்று பேரை காணவில்லை என குழந்தைகளின் பெற்றோர்கள் தேடி வந்தனர். அப்பொழுது நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத கார் ஒன்றுக்குள் குழந்தைகள்சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது. காருக்குள் ஏறி விளையாடிய போது குழந்தைகள் காருக்குள் மூச்சுத்திணறி இறந்தனரா? அல்லது இது கொலையாஎனச் சந்தேகத்தை எழுப்பியுள்ளது 3 குழந்தைகளின் உயிரிழப்பு. இந்த சம்பவம் லெப்பைகுடியில் சோகத்தையும், பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.