Advertisment

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

3 boys drown in pool near Manapparai

Advertisment

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது கீழேபூசாரிப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் பாப்பான்குளம் என்ற குளம் தொடர் மழைபொழிவு காரணமாக நிரம்பியிருந்தது. தற்பொழுது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் மணப்பாறையை சேர்ந்த சிறுவர்கள் அஸ்வின் ராஜ், முரளி, அவரது சகோதரன் மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் குமார் என்ற நண்பருடன் சேர்ந்துகொண்டு குளத்தில் இறங்கி குளித்துள்ளனர். இன்று மதியம் கரையில் குமார் மட்டும் அமர்ந்திருந்த நிலையில் மூன்று சிறுவர்களும் நீச்சல் தெரியாததால் ஒவ்வொருவராக குளத்தில் மூழ்கினர். இதுகுறித்து குமார் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்த நிலையில், அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நீரில் மூழ்கிய ஒவ்வொரு சிறுவர்களின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

pool manapparai thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe