3 boys broke shop shutters and stole money in Vellore

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர்குருவராஜபாளையம்பகுதியைச்சேர்ந்தவர் பரந்தாமன்(42), இவர்அதே பகுதியில் பேருந்து நிலையம் பின்புறம் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களைவைத்து பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் நாள்தோறும் காலை 10மணிக்கு தனது கடையைதிறந்து இரவு 9 மணிக்குமூடிவிட்டு செல்வார்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம்போல்இரவு கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும்நேற்றுகடையைத்திறந்த போதுஷட்டர் உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த பணம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பரந்தாமன் உடனேபோலீசாருக்கு தகவல்கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில்3 சிறுவர்கள் கடை அருகேவந்து அங்கிருந்த ஷட்டரை உடைத்து அதில் ஒருசிறுவன் உள்ளே நுழைந்துகல்லாபெட்டியில் வைத்திருந்தரூ.25 ஆயிரத்தைதிருடிச்சென்றது பதிவாகி இருந்தது.

Advertisment

இதுகுறித்து கடை உரிமையாளர் பரந்தாமன் அளித்த புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவிகாட்சிபதிவுகளைகொண்டுகடையின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிச்சென்ற சிறுவர்களை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் பர்னிச்சர்கடையின் ஷட்டர் உடைத்து சிறுவர்கள் கல்லா பெட்டியில்வைத்திருந்த பணத்தைதிருடிச் சென்றசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.