Advertisment

வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றி வந்த 3 பேர் கைது! 

3 arrested for walking around in the forest

டேனீஷ்பேட்டை அருகே வனப்பகுதிக்குள் நாட்டுத்துப்பாக்கிகளுடன் சுற்றி வந்த மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி அருகே உள்ள லோகூர் மேல்காடு, வால்காடு பகுதிகளில் வன பாதுகாப்புப் படை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனவர்கள் கிருஷ்ணமூர்த்தி, பன்னீர்செல்வம், வன ஊழியர்கள் ரோந்து சென்றனர்.

Advertisment

வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் மூன்று பேர் சுற்றிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் வே.கொங்காரப்பட்டி மேல்காடு பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் (வயது 60), வால்காடு பகுதியைச் சேர்ந்த நவநீதன் (வயது 36), முருகன் (வயது 52) எனத்தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து மூன்று நாட்டுத்துப்பாக்கிகள், பால்ரஸ் குண்டுகள், கரி மருந்து, அரிவாள், கத்தி, கம்பி வலை, டார்ச் லைட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

forest police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe