Advertisment

போலீசாரின் தீவிர சோதனை; அடுத்தடுத்து சிக்கிய நபர்கள்!

3 arrested for smuggling ration rice on motorcycles

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மகாராஜன்புரம் சோதனை சாவடி அருகே தாளவாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 மொபட்டில் வந்த 2 பேர் பேரைத் தடுத்து சோதனை செய்தனர். அதில் 4 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

Advertisment

விசாரணையில் இருவரும் தாளவாடி கலீம் ஷெரிப் (62), ஆரிப் கான் ((45) எனத் தெரியவந்தது. ரேஷன் அரிசியை கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அதே போல் தமிழக, கர்நாடக எல்லை குருபரகுண்டி நால்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட தாளவாடி போலீசார் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 2 மூட்டையில் 90 கிலோ ரேஷன் அரிசி இருந்தது விசாரணையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் முஜீப் அகமது (44) என்பது தெரிய வந்தது.

Advertisment

ரேஷன் அரிசியுடன் கூடிய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrested police rice
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe