வட்டார போக்குவரத்து இணை ஆணையரின் காரில் இருந்து கணக்கில் வராத 28.35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், அவிநாசி சாலை அருகே செயல்பட்டு வரும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இணை ஆணையர் உமா சக்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சவுரிபாளையம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த இவரது காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதில், கணக்கில் வராத ரூபாய் 28 லட்சத்துக்கு 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உமா சக்தியை அழைத்துச் சென்று, கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், 10- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.