28,000 liters of diesel missing - 6 people suspended

நெல்லையில் அரசு போக்குவரத்து பணிமனையில் 28,000 லிட்டர் டீசல் மாயமானது தொடர்பாக ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ளது தாமிரபரணி அரசு போக்குவரத்து பணிமனை. அரசு பேருந்துகளுக்கு நிரப்பப்படும் டீசல் இருப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இருப்பு குறைவாக இருந்தது தெரிந்ததன் அடிப்படையில் சுமார் 28 ஆயிரம் லிட்டர் டீசல் மாயமானதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு 26 லட்சம் ரூபாய் மதிப்பு என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கிளை மேலாளர் உட்பட ஆறு பேரை மாவட்ட போக்குவரத்து கழகம் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.