Advertisment

பவானிசாகரில் 2,800 கன அடி நீர் திறப்பு

2,800 cubic feet water release at Bhavanisagar

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

Advertisment

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82.17 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,365 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 2,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.55 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 3.15 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.20 அடியாகவும் உள்ளது.

Advertisment
water bavanisagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe