/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arrested-2_19.jpg)
திருச்சி மாவட்டம்திருவெரும்பூர்தாலுகாதேனீர்பட்டிஎன்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன்சூரிய மூர்த்தி(28). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பால் வியாபாரம் செய்ய வந்தவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்அப்பகுதியைச்சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி சந்தித்து அவரை தன் வலையில் விழ வைத்துள்ளார்.சூரிய மூர்த்திகடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவரை கடத்திசென்றதாகக்கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிறுமியின் தாயார் தன் மகள் கடத்தப்பட்டுள்ளதாக காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரதுபுகாரின் பேரில்வழக்குப்பதிவு செய்தபோலீசார்சிறுமியைத்தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி பகுதியில்சூரிய மூர்த்திவாடகை வீட்டில் தங்கியிருப்பதாகரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்டுமன்னார்கோவில்போலீசார்சிறுமியையும், அவரைக் கடத்திச் சென்றுசூரிய மூர்த்திஆகிய இருவரையும் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போதுசூரிய மூர்த்திகடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சி பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் வைத்துசிறுமியைத்திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்திவந்ததாகக்கூறியுள்ளார். மேலும்சூரிய மூர்த்திஏற்கனவே இரண்டுபெண்களைத்திருமணம் செய்து அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தவர்.
அப்படிப்பட்டவர் 16 வயது சிறுமியை ஏமாற்றிக் கடத்திச் சென்றது குறித்து வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில்போலீஸ்இன்ஸ்பெக்டர்அமுதா தலைமையிலானபோலீசார்சூரியமூர்த்திமீதுபோக்சோசட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர். நீதிமன்றம்சூரியமூர்த்திசிறை காவலில் வைக்குமாறும் சிறுமியை அவரது தாயாருடன் தங்கியிருப்பதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.சூரியமூர்த்திஏற்கனவே இரண்டுபெண்களைத்திருமணம் செய்து அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றவர். மேலும் மூன்றாவதாக ஒருசிறுமியைத்திருமணம் என்ற பெயரில்சட்டத்திற்குப்புறம்பாகச்சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளித்துள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)