28 lakh hidden in the waist of the person-confiscated officers!

சென்னை ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவர் இடுப்பில் மறைத்து வைத்து எடுத்துவந்த கணக்கில் காட்டப்படாத 28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து ரயில் மூலம் மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து இன்று அதிகாலை சென்னை வந்த ரயில் பயணிகளிடம் சோதனை செய்யப்பட்ட போது, குண்டூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அவருடைய வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் 28 லட்சம் ரூபாயை மறைத்துக் கட்டி எடுத்து வந்தது தெரியவந்தது. அவரை விசாரித்ததில் கொண்டுவந்த 28 லட்சம் ரூபாயும் கணக்கில் காட்டப்படாத பணம் எனத் தெரியவந்ததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment