Published on 05/03/2025 | Edited on 05/03/2025

சென்னை மெரினா காமராஜர் சாலை அருகே ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 28 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை பகுதியில் போலீசார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கார் ஒன்றில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துவரப்பட்ட 28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் காரில் வந்தது பெங்களூரை சேர்ந்த பிரகாஷ், கிரண், சவுகார்பேட்டை அனில் மற்றும் கார் ஓட்டுநர் பால் என தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை கடைகளுக்கு நகைகளை கொடுக்க சென்றபோது சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட 28 கிலோ தங்கம் வணிகவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.